Thursday, August 6, 2020

பகடி


வெண்முரசில் அவ்வப்போது வரும் பகடிகள் அந்த கதைப்போக்கின் ஒட்டுமொத்ததில் நினைவில் மறைந்துவிடுகின்றன. ஆனால் சும்மா புரட்டிப்பார்க்கையில் கண்ணில் படும்போது வெடித்துச் சிரிக்கவைக்கின்றன. பாண்டியனின் அவையில் மகாபாரத நிகழ்ச்சிகளைச் சொல்லும் இளிவரல் பாணன் இப்படிச் சொல்கிறான்

முதலில் காமத்தை பெண்கள் அஞ்சுகிறார்கள். அதன்பின் காமத்தை கைக்கருவியாக்கிக் கொள்கிறார்கள். இறையருளால் அதில் அவர்கள் தேர்ச்சிபெறும்போது அவர்களுக்கு முதுமை வந்துவிடுகிறது

இந்தவரியை வெட்டி இன்று பல நண்பர்களுக்கு அனுப்பினேன். இதிலுள்ள சப்டிலான பகடியை, அதிலுள்ள துடுக்குத்தனத்தை நினைத்து நினைத்து புன்னகைத்துக்கொண்டே இருந்தேன். இந்தவகையான பகடிகளுக்காக வெண்முரசை ராண்டமாக வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என நினைக்கிறேன்

அருள்