Tuesday, October 25, 2016

கங்காளம்



அன்பார்ந்த ஜெயமோகனுக்கு,

வணக்கம் நலம்தானே? கிராதகம் தொடக்கம் அருமை. கங்காளம் என்பது பிராமணர்களின் இல்லங்களில் இருந்த ஒரு பாத்திரமாக நான் சிறுவயதில் அறிந்துள்ளேன்.அடிப்பகுதி குறுகலாக வாய்ப்பகுதி சுமார் இரண்டடி அகலம் இருக்கும். பித்தளை  யாளான அதில் நீர் பிடித்துச் சேமித்து வைத்துக் கொள்வார்கள் தங்கள் பயணங்க ள் இனிமையாக நிறைவேறியதற்கு  வாழ்த்துகள் வரும் நவ-6-ஆம் தேதி இங்கு கண்மணிகுணசேகரன் வந்து என் புதிய சிறுகதைதொகுப்பு சாமி இல்லாத கோயிலை வெளியிடுகிறார். தங்கள் வாழ்த்தை எதிர்பார்க்கிறேன். நன்றி

வளவ துரையன்


அன்புள்ள வளவதுரையன்

கங்காளம் என்பது கோலால் மீட்டப்படும் ஒரு வாத்தியம் துடி போல பெரியதாக இருக்கும். கோலை அதில் வைத்து நீவும்போது விம்மலோசை கேட்கும்

கங்காளரின் சிலை சிவன் கோயில்களில் வலப்பக்கம் மண்டபத்திலோ நடராஜர் சன்னிதி முகப்பிலோ தூண்களில் காணப்படும்

ஜெ