Tuesday, October 25, 2016

பைரவம்



ஜெ

பிரம்மன் முறைதவறிய உறவில் இருந்தான் என்பதனால் அவன் தலையைக்கொய்ய சிவன் ஆணையிட்டான் என்று மட்டும்தான் வங்காளத்து பைரவர் கதைகளில் உள்ளது. அதை மேதாதேவியாக ஆக்கியது உங்கள் மேதாவிலாசம் என நினைக்கிறேன். மேதமையின் கிறுக்கும் கட்டற்ற தன்மையும் முறைமீறலும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. சொல்லில் இருந்து படைத்தது படைப்பு.

எல்லாம் சொல்லிலே இருக்கும் என்பதும் மேதமை சொல்லை மீறிய கிறுக்கு என்பதும் எண்ணி எண்ணி புரிந்துகொள்ளவேண்டியவையாக இருந்தன. நம் புராணங்களை இப்படியெல்லாம்தான் புரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது

பிரம்மன் இருக்கும் பெருநிலையை அறியாமல் பைரவர் கொன்றார் என்பதும் தன்னை உண்டு களியாடும்போது பிரம்மனை அறிந்து அதனால் நிறைவுற்றான் என்பதும் எல்லாம் எண்ண எண்ண பெருகிக்கொண்டே செல்கின்றன

மகாதேவன்