ஜெ
இந்த அத்தியாயங்களின் மிகப்பெரியஅதிர்ச்சியும் துக்கமும் என்பது கிருஷ்ணனின் உருமாற்றம்தான். இது வன்மைகளின் நாவல். எதிர்மறை அழகியல் என்று நீங்கள் சொல்லும் cruel aesthetics வெளிப்படும் நாவல். இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனசு ரொம்பவே மறுக்கிறது
கிருஷ்ணனைப்புரிந்துகொள்ள மிகவும் கஷ்டப்படவேண்டும். அவன் வேதசாரம் அறிந்தவன். அதை நிறுவ வந்த மாமனிதன். மாமனிதர்கள் அனைவருமே இந்த மூதேவியைக் கடந்த சென்று இது அளிக்கும் உலகப்பார்வையையும் அறிந்ந்தாகவேண்டும்
நன்மை அழகு தியாகம் வழியாக மட்டும் அல்ல இவள் அளிக்கும் துரோகம் கசப்பு அசிங்கம் வழியாகவும் அறிந்தால் மட்டுமே வேதஞானம் முழுமை அடைகிரது என்பது அற்புதமான ஒரு விஷயம்
ஆனாலும் கிருஷ்ணனை அப்படி காண மனசு மறுத்துக்கொண்டே இருக்கிறது
கல்யாணராமன்