Friday, October 28, 2016

வாம மார்க்கம்





அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

வணக்கம்,சென்ற நாவல் தட்ஷிணமார்க்கம் என்றால்,கிராதம் வாம மார்க்கம்.வைசம்பாயனன் சந்திக்கும் பிட்சாண்டவரும் இருளிலிருந்து வருகிறார்,தாருகாவனத்தில் நுழையும் பிச்சாண்டவரும் இருளிருந்தே வருகிறார்,சிவனார் தன் நாயையும், நோயையும் தன்னிலிருந்து விளக்கிவைக்க அறிந்தவர் ,அதனாலே ஆற்றங்கரையிலே அவற்றை அமர்த்திவிட்டுவருகிறார்,அவரை கண்டவுடன் தாருகாவனத்தில் இருந்தவரிகளின் மனயிருளிலிருந்து  அவர்களில் சுயம் வெளிவருகிறது,

அடுத்தது காட்டாளனை அறியா வேதம் என்று ஒன்று இருந்தால் அதை அழைத்து செல்லுங்கள் என்றதும்,மற்ற முன்று வேதங்களும் அத்ரியை சிறிதேனும் அறிந்து எதிர்வினையாற்றுகின்றன,ரிக் வேதம் அத்ரியை யாரேன்றே அறியவில்லை,ஆம் அது தொல் காலத்தில் காட்டில் வாழ்ந்த ஆதிவாசியின் சொல்தானே அது

பிச்சாண்டவர் கதையில் தருகாவனவாசிகளுக்கு வந்தது சிவன் என்று கூறுவது அனுசூயாதான்,இந்த கதையுடன் மூம்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி அனுசூயா முலைபால் கொடுத்த கதையையும் இணைத்துவிட்டீர்கள்,அருமை,

பைரவரிடம் முதற்சிவம்மண்டை என்பது இரப்பதற்கு தான் அதை நிரப்பி உன் வயிற்றை நிரப்பிக்கொள்என்றது,வைரவர் எங்கேங்கோ அலைந்தும் அது நிரம்பவும் இல்லை பசியை தீர்க்கவில்லை,இறுதியில் தன் குருதியை குடித்து நிரைகிறது பைரவசிவம்,அறிவை தேடி அலைந்து(மண்டையில் இரந்து),தான் யாரேன்ற கேள்விக்கு விடைதெரியாமல்(பசி அடங்காமல்),இறுதியில் தன்னையே உண்டு தானே பிரம்மம் என்று அறிகிறது பைரவசிவம்,சொல்வளர்காட்டில் வரும் சுவேதகேது அனைத்தையும் கற்றும் இறுதியில் அவன் தந்தைஅது நீயே தான்என்ற உண்மை உரைப்பார், அதே கதைதானே இதுவும் ஆனால் வேறு வடிவில்


இப்படிக்கு
குணசேகரன்