ஜெ
சூதனின் நக்கலை நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். பொதுவாக இத்தகைய கிண்டல்களும் நகைச்சுவைகளும் சாதாரண வாசிப்பில் பிடிகிடைப்பதில்லை. நகைச்சுவை பலவகை. ஏற்கனவே நாமே சிரித்துக்கொண்டிருக்கும் ஒன்றைப்பற்றி கிண்டல் செய்தால் நாம் சிரிப்போம் அதுதான் பொதுவாக நகைச்சுவையாகக் கருதபப்டுகிறது
விட் எனபடும் சொல்லை மடக்கும் சிரிப்புக்கும் எப்போதும் கொஞ்சபேர் இருப்பார்கள். அதோடு மென்மையான நகைச்சுவை ஒன்று உண்டு. ஒரு சந்தர்ப்பத்தை அபத்தமாக ஆக்கிக் காட்டுவது . பேயோன் எழுதுவது அப்படிப்பட்டது. அசோகமித்திரன் எழுத்திலும் சிலசமயம் அது வரும்
தத்துவார்த்தமான நகைச்சுவை என்பது ஒரு புன்னகையை நினைக்கும்போதெல்லாம் உருவாக்குவது. அதற்கு அந்தத் தத்துவத்தை நாம் அறிந்திருக்கவேண்டும். இந்த அத்தியாயத்திலே சூதன் வேதாந்தத்தை பலவகையிலே கிண்டல் செய்கிறான்.அந்த அடுமனைக்கிண்டல் அற்புதமானது என்றால் வெளியே வருவது எதுவாக இருந்தாலும் உள்ளே செல்வது வேதம் அல்லவா? என்ற வர உச்சம்
சாரங்கன்