Wednesday, October 26, 2016

யானையை உரித்தல்



சார் ,

5, 6 பகுதிகளை வாசித்தேன் . கரிபிளந்தெழல் க்கு இப்போதுதான் அர்த்தம் புரிந்தது . (இருட்டை பிளந்தெழுந்த கதிரவன் , யானையை பிளந்து நிற்கும் சிவம் ).

அந்த குகை ஓவியம் வைத்துதான் இதை புரிந்து கொண்டேன் .

இருட்டு அஞ்ஞானம் , அதை விலக்கி ஞானமடைதல் - இப்படி பொருள்கொண்டேன் .

இருட்டு - யானை - இதை இரவு நாவலில் இருட்டை யானையாக உருவகிப்பாரே ஒரு சாமியார், அதை வைத்து புரிந்து கொண்டேன் .

கனவுலகம் கைகொண்டவன் இயல்பு - சந்திரன் - வைமசாயனன் .

பிச்சாடனர் - சூரியன் - யோகநெறி இயல்பு .

இதை இருவருக்குள்ளும் யானையின் ஸ்பரிசம் , ஒற்றை தந்தம் ( வைசாயனன் ) .. வைத்து புரிந்து கொண்டேன் .


சார் , இதில் வரும்வரி ஒன்னு இருக்கிறது , 'அன்னை தன் ஆடையில் இருந்து ஒரு பாவையை எடுத்துக்காட்டி பின் மறைத்து கொண்டாள் ' னு . இந்த நூல் எனக்கு அப்படிதான் . நான் புரிந்துகொள்ள முயலும்போது அது தன்னை மறைத்து கொள்கிறது . நான் இந்த இரண்டுநாள் பகுதியில் புரிந்துகொள்ள முடியாமல் நகர்ந்த வரிகள் அதிகம் , அப்படி தாண்டுவது எனக்கு நரகம் , என்னோட இயலாமை அது .

திரும்ப இன்றைக்குள் படித்து புரிந்து கொள்வேன் .

ராதாகிருஷ்ணன்