Wednesday, October 26, 2016

கஜசம்ஹாரர்




ஜெ

யானையை உரித்தல் என்பது தேவாரப்பதிகங்களில் வந்துகொண்டே இருக்கும். அதற்கு பிராமணர்களின் தவத்தைக் கலைத்த கஜாசுரனை சிவன் கொன்று அந்தத் தோலைப்போர்த்திக்கொண்டார் என்று மட்டும் பொருள் சொல்வார்கள். 

தெக்கத்திச் சிவன்கோயில்களில் கஜசம்ஹாரமூர்த்தியின் சிலை இருக்கும். அந்தச்சிலையை ஒரு சாதாரண புராணக்கதையின் வடிவம் என்றுதான் பேசாமல் கடந்துபோவோம். அதேபோல கங்காளர் பைரவர் எல்லாமே நானெல்லாம் சும்மா கடந்துபோன சிலைகள்

ஆனால் இன்று வாசிக்கும்போதுதான் அது எத்தனைபெரிய யோகமரபின் குறியீடு என்று தெரிகிறது. இருட்டு எனும் யானை. அதில் உதிக்கும் இருநிலவுகள். அதை உரித்துப்போர்த்தும் செம்பொன் மேனி அண்ணல். நினைக்க நினைக்க பிரம்மாண்டமாக இருக்கிறது

இத்தனைநாள் புராணக்கதைகேட்கும் சுவாரசியத்தில் அறிய மறந்த யோகத்தின் ஆழம் இது

சிவக்குமார்