Monday, October 24, 2016

உண்ணுதல்




ஜெ

கிராதம் ஆரம்பம் முதலே தன்னைஉண்ணுதல் என்னும் அம்சம் வந்துவிட்டிருக்கிறது. அந்த ஒரு புள்ளியைச்சூழ்ந்தே கதைகள் சென்றுகொண்டிருக்கின்றன. பன்னிரு படைக்களத்தில் இரட்டைத்தன்மை அப்படி வந்தது. சொல்வளர்காட்டில் வெளியேறிச்செல்லுதல் என்னும் அம்சம் மையமாக திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தது. இந்தப்புள்ளியை அடையாளம் கண்டுகொண்டபின்னர் மொத்த நாவலையும் இதனடிப்படையில் தொகுத்துக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்


‘தன்னையே உண்கிறது பிரம்மம்’ என்பது மையவரி. அது ஒரு ஆப்தவாக்யம். அதிலிருந்து தன்னை உண்ணும் காளாமுகர். தன் மகளைப்புணரும் பிரம்மன். தன் குருதியை குடிக்கும் பைரவன் என்று கதை விரிந்துசென்றுகொண்டே இருக்கிறது

சுவாமி