ஜெ
கரியுரித்தலை
வாசித்துக்கொண்டிருந்தேன். புராணத்திலிருந்து திடீரென்று சமூக வரலாற்றுக்குச் சென்று
பெரும்பனிக்காலத்தை சுட்டிக்காட்டி அந்தத் தொன்மத்தின் சமூக அர்த்தம்நோக்கிச் சென்றபோது
ஒரு லெட் டவுன் உணரமுடிந்தது. ஆனால் வெண்முரசின் அமைப்பே இந்தவகையான விசித்திரமான கலவைதான்.
இது ஒருநவீனநாவல் என நினைத்துக்கொண்டேன்
ஆனால் பின்னர்
யோசிக்கும்போது அந்தப்புராணம் உருவாகிவந்த சமூகக்காலகட்டம் கொடுக்கும் ஆழமும் அற்புதமானது
என்னும் எண்ணம் ஏற்பட்டது. அங்கிருந்து அந்தப்புராணத்துக்கு வந்தபோது ஒருவகை பிரமிப்பு.
எதுவுமே உணரமுடியாத நிலை
ஜெகதீசன்