Monday, October 24, 2016

மேதாதேவி




வணக்கம் .  நலமறிய ஆவல்

'கிராதம்' -3 ம் பாகம் இப்போது தான் சுவைத்தேன்.  வியந்தேன் . முதல் 2 பாகங்களில் இல்லாத உணர்வு பேரெழுச்சியை மனதில் கண்டேன்.   யார் இந்த மேதா தேவி ? எந்த கடவுளின் வடிவத்தில் வணங்க படுகிறாள் ? வேத சொல் காப்பாற்ற சரஸ்வதியின் அம்சமாக இருக்கிறாளா ?

பைரவ சிவம் பரவசப்படுத்துகிறார் .  

மிக்க நன்றி
ரா.ஹரிஹர வெங்கடேசன் 



அன்புள்ள ஹரிஹர வெங்கடேசன்
குணங்களை தெய்வங்களாக்கும் மரபு புராணங்களில் உண்டு. மேதா தட்சனின் மகள். யமன் மனைவி. இத்தகைய தெய்வங்களில் அப்பெயர்களே பொருள் சுட்டுபவை. அவற்றை தொட்டு கற்பனை முன்சென்றாகவேண்டும்
ஜெ