அன்புள்ள
ஜெ ,
இப்போது
பைரவசிவம்தான் எனை ஆட்கொண்டிருக்கிறார்
:)
இதில் இரண்டு இழைகள் இருக்கின்றது .
1. அத்திரியின் மனநிலை என்பது கற்றவரின் ஆணவம் ( இந்தவார்த்த பொருந்தாது , வேறுவார்த்தை வரல என்பதால் இதை வைக்கிறேன் ) . இன்னொரு தளத்தில் அதற்கிணையானது பைரவ சிவமின் கப்பரை .
ஆணவமும் கப்பரையும் வீழ்ந்த பிறகே அவர்கள் தன்னிலை அடைகிறார்கள் .
2. இன்னொரு இழை , இதனுள் மூன்று இழைகள் உள்ளன
1. படைப்பு
மனநிலை ,
2. தன்னையே
உண்ணும் மனநிலை ( ரத்தத்தை அருந்துவது )
3. அம்மையை
அடைவது ( பைரவம் - அனுசுயை ) .
தொல்சிவன் படைப்புமனநிலைக்கு இணையான அல்லது அதன் ஒருதுளியை அறியும்போதுதான் கப்பரை அகலும் என்கிறார் . அனுசுயையில் அதை அடைகிறார் . இன்னொரு இழை தன்குருதியில் தன்னையுணர்வது , இது எப்படி படைப்புமனத்திற்கு பொருந்தும் என தெரியவில்லை . ஆனா லிங்க் இருக்கு :)
சார் , வித்தியாச மிருகங்கள் செம , ஒவ்வொன்னையும் யோசிச்சு பார்த்தேன்
இன்னொருவிசயம் , ஒரு உச்சம் தொட்டால் , அது தவறானாலும் மனம் அதைத்தான் நாடும் என கிரிமினல் நபர்களின் மனநிலை பற்றிப்பேசும்போது ஒருமுறை சொல்லியிருக்கீங்க ,இதை பிரம்மனில் பார்த்தேன் :)

நிறைய எழுத தோனுது , உதாரணமா தொல் சிவன் கயிலாய மலையாகவே வருகிறார் , அந்த காட்சிஅனுபவம் பேரழகு .
அப்பறம் அத்ரி தோற்றேன் என கிளம்பும்போது தடுக்கும் பைரவர் சொல்லும் வார்த்தை ( ரத்தமும் கண்ணீரும் சிந்தாமல் வேதத்தை புரிந்து கொள்ள முடியாது ) நீங்க முன்ன எழுதின கீதா முகுர்த்ததிற்கு இணையானது .
சார் அப்பறம் காற்றேற்றம் அழகான வார்த்தை , எனக்கு முதலை பறந்தது , விமானம் பறந்த மாதிரி இருந்தது :)
முளைத்து நிற்கும் வாழை குருத்து செம உவமானம் :))
சார் , எனக்கு கதை கிளிக் ஆனதே நோய்க்கிழவியால்தான் . இப்ப யோசிக்கும்போது அதில் அனுசை தெரிகிறாள் , என்னனு மங்களா தூரத்துல தெரியுது :) , இப்ப சரியா சொல்லமுடியலை .
நன்றிசார் , வாசிக்கின்ற சந்தோசத்தை தந்ததற்கு .
ராதாகிருஷ்ணன்