Sunday, October 23, 2016

பைரவர் கதை



ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு நாவல் வரிசையை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதுவரை கடிதம் எழுதியதில்லை. நான் சைவத்தில் ஆர்வம் கொண்டவன். சைவத்திற்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பு எனக்குத் தெரியும் என்றாலும் இப்போதுதான் இப்படி உரைக்கும் படி மூளைக்குப்ப்டி கிடைத்தது. கிருஷ்ணனின் சீடன் பாசுபத  ஞானத்தை சிவனிடமிருந்து பெறுவதில் ஒரு பெரிய சூட்சுமம் உள்ளது என்ற எண்ணம் ஏற்பட்டது

அதற்கேற்ப கிராதம் சிவனின் வடிவங்களில் இருந்து ஆரம்பித்திருக்கிறது. தனித்தனிக்கதைகளாக உள்ள சிவபைரவர், தாருகவனபிரவேசம் கதைகளை அழகாகக் கோத்து ஒற்றைக்கதையாக ஆக்கியிருப்பதும் அழகு

ஆனால் அதற்கு நுணுக்கமான அர்த்தம் அளித்திருப்பதை நினைக்கையில் புராணங்களை எழுதிய மாகவிகளின் அருள் உங்களிடமிருப்பதாகவே நினைக்கிறேன்.

எஸ். வள்ளிநாயகம்