ஜெ
காலபைரவன் தன் குருதியை உண்டு களியாடும் காட்சியை நான் பன்னிருபடைக்களத்தில்; ரக்தபீஜன் எழும் காட்சியுடன் கற்பனைசெய்து இணைத்துக்கொண்டேன். அதில் அவன் குருதி முளைக்கிறது. அவனை அது அழிக்கிரது. இங்கே அவன் குருதி அவனுக்கே உணவாகிறது. அவனை மீட்கிறது. குருதியை ஆணவம் என்று எடுத்துக்கொண்டால் அற்புதமான ஒரு பொருளிணைவு இருக்கிறது இதில்
இந்நாவலில் வரும் சைவ மரபின் கதைகளை சாக்த மரபின் கதைகளான பன்னிருகளத்தின் கதைகளுடன் இணைத்துப்பார்க்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன்
ஜெயராமன்