ஜெ
கிராதம் ஆரம்பத்திலேயே அதன் morbid aesthetics ஐ அழகாக வெளிப்படுத்திக்கொண்டு முன்னே செல்கிறது. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் வீச்சும் கொப்பளிப்பும் கொண்டதாக இருக்கிறது. அதை வாசிக்கையில் சிலசமயம் அருவருப்பு கொண்டு குமட்டுகிறது. மரணம், இருட்டு. மனிதன் அறிந்த முதல் ஆழம். அங்கிருந்துதான் சைவம் பிறந்து வந்திருக்கவேண்டும் என தெரிகிறது
காபாலிகர் இருண்ட கலம் வியர்த்து இருட்டு போல துளி கொள்வதாக எழுதியிருந்ததே சைவத்திற்கும் சரியான உவமை. அது பிரபஞ்ச இருளால் உருவாக்கப்பட்ட ஒளி
ஆர். பாரதி