ஜெ
வெண்முரசில் இதுவரை வராத ஒரு வர்ணனை ஆண்குறி விவரிப்பு. தென்னாட்டில் சிவன் ஆலாலசுந்தரனாகத்தான் வந்து பெண்களைக் கவர்கிறான். நிர்வாணமாக வரவில்லை. இங்கே உள்ல சிலைகளிலும் அப்படி இருக்காது. நீங்கள் அப்படி வடநாட்டு வெர்சனை எழுதியதுகூட சரி. ஆனால் சிவனை அபபடி வர்ணித்திருப்பது அத்துமீறல் என்றுதான் தோன்றியது
அதோடு ரிஷிபத்தினிகள் அப்படி ஆண்குறியைக் கண்டு ஆசைப்பட்டுப் போனார்கள் என்பதும் அத்திமீறிய கற்பனை. அவர்களை எல்லாம் அவிசாரிகள் என்று சொல்வதற்குச் சமம். அதற்கெல்லாம் நமக்கு உரிமை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்
ராம்பிரசாத்