ஜெ
வெண்முரசின் நுணுக்கமான பகடிகளை நான் வாசித்துச் சிரித்தது உண்டு. பெரும்பாலும் அவை சூதர்களால் சொல்லப்படுபவை. நீங்கள் இந்தச் சூதர்களை ஒரு பெரிய குணச்சித்திரமாகவே வளர்த்துக்கொண்டு செல்கிறீர்கள். அவர்கள் உண்மைய்லேயே ஒரு பெரிய ஃபினாமினான் ஆக இருந்திருக்கிறார்கள். பிற்பாடு சம்ஸ்கிருத நாடகங்களிலே அவர்கள்தான் சூத்ரதாரிகளாக வந்தார்கள் என நினைக்கிறேன்.
சூதன் சொல்லும் பகடிகள். அந்தக்கிளி கண்டுபிடித்துவிடும் என்னும் இடம் . அதேபோல தூய்மையிழக்கும் அந்தணன் மெய்மையடைகிறான் என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போன்ற உண்மை தூய்மையிழக்கும் உணவைத் துறந்தால் அதைவிட கீழான உணவே அடுத்தவேளைக்குக் கிடைக்கும் என்பது” என்ற வரி. தன்னை மிகவும் சாதாரணமாக ஆக்கிக்கொண்டு வார்த்தைகளை வைத்து விளையாடுகிறான்
இன்றைய நவீன வாசகனுக்கு இந்தப்புராணம்மீதெல்லாம் இருக்கும் மெல்லிய நக்கலையும் சூதர்கள் வழியாக உள்ளே கொண்டுவந்துவிட்டீர்கள். சூதர்கள் வெண்முரசின் காவியத்தன்மைக்குச் சரியாகப்பொருந்தகிறார்கள். அதேசமயம் இதை ஒரு நவீன நாவலாகவும் ஆக்குகிறார்கள்
மகாதேவன்