Sunday, October 23, 2016

கொன்றழித்து அருளும் கடவுள்.




காடழித்து நாடாக்கி பின் நாடழித்து காடாக்குபவன்.

அவன் கண்பார்வையால்  காடுகள் எரிகின்றன,
மலைகள்  எரிகின்றன, நதிகள் எரிகின்றன,
பெருங்கடல்கள்  எரிகின்றன சூரியனும் சந்திரனும் விண்மீன்களும் எரிந்தழிகின்றன.

எரிந்தமைந்த சாம்பலில்  புரண்டாடும் சிறுகுழந்தை
அச்சாம்பலை புசிக்கும் பித்தன்.

அச்சாம்பலிலிருந்து மீண்டும் அனைத்தையும் பிறப்பிக்கும் சித்தன்.
அவன் ஒரு விழி நீர்த்துளிகள் விதையென விழுந்து பிரபஞ்ச பொருட்களை  பிறப்பிக்கின்றன.

 மறு விழிஉதிர்க்கும் நீர்  அவற்றுக்கு உணவாகி  காக்கிறது.
அவனின் நுதல்   விழியின்  நீர் அவற்றை எரித்தழித்து சாம்பலாக்குகிறது.

அவன் சொற்களை எரியூட்டுகிறான்அனைத்து வேதங்களும் அவன் பார்வைபட்டதும் பற்றி  எரிகின்றன. அனைத்து வேதஞானங்களுடன் அணுகும் ஒருவன் அவனை அணுகியதும் அனைத்து அறிவுகளும் அறவே எரிந்து  அவனேநான் என்ற நீறே அவனுள் எஞ்சுகிறது
அவன்  சொற்களாக  சுழன்றாட கிராதம் வெண்முரசில் எழுகிறது
இந்நூலைக்க கற்பது எனக்கு அவனைத் தொழுவதாக ஆகுவதாக
சிவோஹம்.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gifதண்டபாணி துரைவேல்