அன்புள்ள ஜெ
நலம்தானே?
அர்ஜுனனின் இறுதியை
வாசிக்கும்போது நெஞ்சடைத்தது. அவ்வளவு பெரிய வீரன் காண்டீபத்தை தூக்கமுடியாமலாகி, அடிவாங்கி,
இழிவுபட்டு கீழ்மைப்பட்டு கிடக்கிறான். எப்பேர்ப்பட்ட இழிவு. ஆனால் அவன் வெற்றியை பார்த்தவன்.
புகழைப்பார்த்தவன். இதையும் பார்க்காமல் அவன் யோகியாக ஆகமுடியாது.
இந்தக்கதையை எவ்வளவு
பெரிய வீரனாக இருந்தாலும் கடவுளருள் இல்லாமல் வாழமுடியாது என்பதற்கான சான்றாகச் சொல்வார்கள்.
ஆனால் அனுபவத்தின் இரண்டு எல்லைகளைக் காட்டுவதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்
சாரங்கன்