Thursday, July 9, 2020

அர்ஜுனனின் ஆற்றல்



அன்புள்ள ஜெ 

அர்ஜுனனின் ஆற்றல் எல்லாம் போய் அவன் நடைபிணமாக ஆகி அடிபட்டு கிடக்கும் காட்சி கண்ணீரை வரவழைத்தது. ஏன் கிளாஸிக்குகள் திரும்ப எழுதப்படவேண்டும் என்ற கேள்விக்கான பதில் இதுதான். இப்படித்தான் கிளாஸிக்குகளை திரும்ப எழுதவேண்டும். இந்தமாதிரியான ஓர் உச்சகட்ட நிகழ்ச்சியை கிளாஸிக்கிலேதான் கொண்டுவர முடியும். 

காண்டீபம் என்பது என்ன? அது அவனுடைய ஆணவம்தானே? வீரன் என்ற நிமிர்வு. அவன் தன்னை முற்றும் துறந்தவனாக நினைக்கிறான். ஆனால் தன்னை பப்ருவாகனனிடம் அறிமுகம் செய்துகொள்ளும்போது தன் அடையாளங்களை பெருமையாகச் சொல்கிறான். தன் புகழைச் சொல்கிறான். அந்த அடையாளம்தான் காண்டீபம். அதுதான் இங்கே இல்லாமலாகிறது. அவனை கைவிடுகிறது. இங்கேதான் அவன் துறவி ஆகிறான். 

அந்த மலக்குழிக்குள் அவன் கிடப்பது ஒரு மறுபிறப்பு. அதன்வழியாக அவன் வெளியே வந்துதான் இன்னொரு மனிதனாக ஆகிறான். அதன்பின் அவன் மனசு என்னவாக இருக்கிறது என்று நாவல் சொல்லவே இல்லை. சொல்லவேண்டியதுமில்லை. சொல்லவும் முடியாது. வாசகர் அவரவர் திறமைக்கேற்ப அதை ஊகித்துக்கொள்ளவேண்டியதுதான் 

ராஜ்குமார்