அன்புள்ள ஜெ
வெண்முரசின் முடிவில்
பாற்கடலே வெண்முரசாக ஆகிறது. அதன் அலையோசைதான் அறம் என்ற உருவகம் பாணனின் சொல்லில்
வந்து செல்கிறது. அந்த அலைகளின்மேல் பள்ளிகொள்பவன் வந்து நிகழ்த்திச் சென்ற ஒரு லீலையே
மகாபாரதம். ஆனால் அது அலைகொண்ட கடல்தான். அமைதியானது அல்ல. அந்த அலையிலிருந்தே ஞானம்
என்னும் அமுதம் திரளமுடியும். அறத்தின் அலைகள் எல்லாமே ஞானம் திரள்வதற்காகவே என்று
நான் எடுத்துக்கொண்டேன்.