Saturday, August 8, 2020

கண்கள்



அன்புள்ள ஜெ, 

பாண்டவர்களின் மகாப்பிரஸ்தானத்தில் யுதிஷ்டிரனைப் பார்க்க அந்த கரிய நாய் கண்கள் ஒளிவிட வரும் காட்சியை நினைத்துக்கொண்டபோது அந்தக்காட்சி முன்பே வந்திருக்கிறதே, எங்கோ க்ளூ கொடுத்திருக்கிறீர்களே என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். பிடிகிடைக்கவில்லை. எங்கே எங்கே என்று மனம் உழன்றிகொண்டே இருந்தது

யுதிஷ்டிரன் பிறக்கும்போது காட்சிதரும் எருமையின் நினைவு வந்தது. ஆச்சரியம் அந்த நாவல்பகுதியை எடுத்துப்பார்த்தால் ஷண்முகவேல் அதை வரைந்துமிருக்கிரார். அதே கண்களின் ஒளிதான். அதேபோல கடைசியிலும் வருகிறது. 

இந்த ஒருமை பிரமிக்கச்செய்கிறது

பாஸ்கர் எம்