அன்புள்ள ஜெ
வெண்முரசின் கதாபாத்திரங்கள் உடலிலேயே குணச்சித்திரம் திகழ்வதைப்போல ஆவதைப்பற்றி ஒருவர் எழுதியிருந்தார். நானும் அதையே நினைத்துக்கொண்டிருந்தேன். பழைய ஓவியங்களிலெல்லாம் முகங்கள் ஒர் உனர்ச்சியில் உறைந்திருக்கும். அதுதான் விக்ரகத்தன்மை என நினைக்கிறேன். சீன ஓப்பராவில் முகமூடிகளும் இப்படித்தான் பயன்படுத்தப்படுகின்றன
ஓர் உதாரணம் சொல்லலாம். துரியோதனனின் குணச்சித்திரமாற்றம் அப்படியே உடலிலும் திகழ்கிறது. கருமையும் ஒளியும் மாறிமாறி வருகின்றன இன்றைக்கு நினைத்துப்பார்க்கும்போது அந்த மாற்றங்கள் வழியாகத்தான் துரியோதனின் குணச்சித்திரப்பரிணாமத்தையே ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது
அர்விந்த்