அன்புள்ள ஜெ
தவளைவேதம் பற்றிய கடிதங்களை வாசித்துக்கொண்டிருந்தேன்.
வெண்முரசின் ஒருமையைப்பற்றி நான் அவ்வப்போது நினைப்பதுண்டு. எத்தனை ஆயிரம் பக்கங்கள்.
ஆயிரத்துக்குமேல் கதாபாத்திரங்கள். பல ஆயிரம் நிகழ்வுகள். ஆனால் மொத்த நாவல்கூட்டமும்
ஒரே நாவல்போல ஒன்றாக ஆகியிருக்கும் விந்தைதான் கலை. நினைத்து நினைத்து ஆச்சரியப்படவேண்டியதுதான்
மழைப்பாடலில் நாவல் முடியும்போது
துயரை அழிக்கும் மழைக்காக ஏங்குகின்றன தவளைகள். மழைமழைமழை என்று சத்தமிடுகின்றன. குருஷேத்திரம்
முடிந்தபின்னர் வரும் மழைக்காகத்தான் அவை சத்தம்போட்டு பிரார்த்திக்கின்றன என்று நினைக்கிறேன்.
அந்த மாமழை மொத்தத்தையும் கழுவி புதிய சேறு மூடி மண்ணுக்குள் கொண்டுபோய்விடுகிறது.
அஸ்தினபுரி மீண்டும் முளைத்தெழுகிறது
சாரங்கன்