Sunday, August 9, 2020

கண் திறத்தல்


ஜெ வெண்முரசு நிறைந்திருக்கிறது. அது குறித்து எழுதுவதெனில் நிறைய எழுத வேண்டும். எழுதுவேன். வெண்முரசை புனைவாகவோ காவியமாகவோ வாசிக்கலாம்தான். அதைவிடவும் பண்பாட்டின் ஆழ்பிரதிக்குள்நுழையும் வழியாக கொள்வது முதன்மையானது என நினைகிறேன். 

நமக்கு புராணங்களும் சிற்பங்களும் தொன்மங்களும் விழுமியங்களும் தத்துவங்களும் தனித்தனியாகஅறிமுகமாகி கிடைக்கின்றன. அவற்றை இணைக்கும் மைய சரடு என எந்த பிரதியும் இல்லை. அது நிகழாதவரை இவை அனைத்தும் கல்லாக இருக்கின்றன. வெண்முரசு இவற்றை தொடுத்து நம் பண்பாட்டின் ஆழங்களுக்கு படிமங்கள் வழியாக செல்வதற்கும் அதன் தரிசனங்களை தனக்குள் நிகழ்த்திக்கொள்ளுவதற்கும் ஒரு பெருவெளியை உருவாக்கித் தருகிறது. 

சிற்பங்களுக்கு கண் திறப்பதைப் போல. அப்படி நான் அடைந்தவற்றில் ஒன்று மட்டுமே இந்த கிருஷ்ண தரிசனம். இதை மட்டும் இப்போது பகிர்ந்துகொள்கிறேன்.

ஏ.வி.மணிகண்டன்