Sunday, August 9, 2020

சீதை


அன்புள்ள ஜெ

வெண்முரசு நூல்வரிசையை மீண்டும் படிக்கவேண்டிய நிலை. ஏழாண்டுகளாக நீடித்த போதை. ஆகவே முதற்கனலில் இருந்து ஆரம்பித்தேன். முதற்கனலைச் சரியாகப்படிக்கவேயில்லை என்ற நிலையை அடைந்தேன். அன்று சுருக்கமான கதையோட்டம் மட்டும்தான் மனதில் நின்றது. இன்றைக்குத்தன் ஆழமான அர்த்தங்கள் பிடிபட்டன. ஏனென்றால் வெண்முரசின் புனைவு உத்தி என்ன என்பதை இன்றைக்குத்தான் உணர்ந்தேன்.

உதாரணமாக, அம்பை படகில் வரும்போது நிருதன் சீதையின் கதையைப்பாடுகிறான். ஆனால் அது ஏன் என்று புரியவில்லை. வெண்முரசில் இப்படி ஒரு இணைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. தாட்சாயணிகதைக்கும் அம்பைக்கும் இனைப்பு. துரௌபதிக்கும் தமயந்திக்கும் இணைப்பு. இரு கதைகளை அருகருகே வைக்கும்போது இர்ண்டுமே துலங்கிவருகின்ரன

அம்பை காத்திருக்கிறாள். சீதையை ராவணன் கொண்டுவந்ததுபோலத்தான் அவளைக்கொண்டுவந்தது. அவள் தீக்குளித்து தீவடிவில் நான்கு தலைமுறை காத்திருக்கிறாள். அம்பையை என்னால் சீதையின் நெருப்புவடிவம் என்றுதான் நினைக்கமுடிகிறது. சீதை புவி. அம்பை எரி

ஆர்.சந்திரசேகர்