Tuesday, August 11, 2020

குறியீடுகளாகும் மனிதர்கள்


அன்புள்ள ஜெ

வெண்முரசின் கதாபாத்திரங்கள் உடல் வழியாக வெளிப்படுவதைப்பற்றிய கடிதங்களைக் கண்டேன். மிகவும் சுவாரசியமான ஒரு விவாதம் இது. விரிவாக விவாதிக்கவேண்டியது. நம்முடைய இலக்கிய பார்வைகளெல்லாம் நவீன இலக்கியம் சார்ந்த்வையாகவே உள்ளன. அவற்றில் நம் கிளாஸிக்குகளை மதிப்பிடும் அளவுகோல்கள் இல்லை

நம்மூர் நாடகக்கலைகளில் எல்லாம் ஒரு கலர் ஸ்கீமா உண்டு. இன்னின்ன குணாதிசயமுள்ள கதாபாத்திரங்களுக்கு இன்னின்ன கலர் இன்ன வடிவம் என்றெல்லாம் வகுக்கப்பட்டிருக்கும். அந்த வரையறையின் அழகியல் என்று ஒன்று உண்டு. அதாவது அந்தக்கதாபாத்திரம் திட்டவட்டமானது, ஆனால் அதற்குள் எல்லா நுட்பங்களுக்கும் இடமுண்டு.

இந்தவகையான உடல்ரீதியான வெளிப்பாடுகள் கிளாஸிக்குகளுக்கு ஏன் தேவைப்படுகின்றன என்றால் அவை ரியலிஸ்ட் களத்தில் நிலைகொள்ளவில்லை. அவற்றில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் குறியீடுகள் என்பதனால்தான்

ஸ்ரீனிவாஸ்