திமிறும் குதிரை, அதை சிரித்து கொண்டே அடக்கும் வீரன் என்ற ஒ௫ சித்திர காட்சியை ஞாபகபடுத்தியது இன்றைய அத்தியாயம்... தி௫ஷ்ட்த்யுன்மன் வெகு லாவகமாக பாமாவை கையாள்கிறான், எப்பொழுது தன் என்னங்களை எதிராளி அறிந்து கொள்கிறானோ அப்பொழுதே அரசு சூழ்தலில் தோல்வி அடைகிறோம் என அறியாமலே பாமா எளிய பென்னாகவே தோற்றமளிக்கிறாள் (ஒ௫ வேளை நரகாசுர வத படலம் வந்தால் பாமாவின் வேறு முகம் தெரிய வ௫ம்...).. பிரிந்து பிரிந்து செல்லும் என்னங்களை வளைதடியில் தட்டி தொகுக்கும் ஆயள் அவள் என்பது அழிகிய கற்பனை... ஷத்ரியனான தி௫ஷ்டத்யும்னின் எள்ளலும் இதில் வெளிபடுகிறது
ரகுராமன்
ரகுராமன்