நதி என்பது எண்ணனம், எண்ணம் என்பது வாழ்க்கை, வாக்கை என்பது நதி, ஒரு வட்டம் உருவாகிறது. இந்த வட்டத்தின் தொடக்கமே மையமாகின்றது. அது மையம் என்பதை அறியாமல், அதை தொடக்கம் என்றுதான் ஒவ்வொரு அர்ஜுனனும் வாழ்கின்றார்கள்.
அர்ஜுனர்கள் அந்த மையத்தை நதியின் எதிர்திசையில் பயணித்து அறிகின்றார்கள். கண்ணன் சொல்வதுபோல உலகம் கண்ணுக்கு வெளியில் பாதியும் உள்ளே பாதியும் உள்ளது. விழியில் இருந்து தொடங்கும் உலகம், விழிக்கு வெளியும், விழிக்கு உள்ளேயும் உள்ளது என்பதை தியானத்தின் வழியாகத்தான் கண்டுக்கொள்ளமுடியும். நதியின் எதிர் திசையில் படகை ஓட்டுவதுபோல எண்ணத்தின் எதிர் திசையில் இயங்குவது தியானம்.
அர்ஜுனன் படகு நதியின் எதிர் திசையில் இயக்கி சென்று மண், நீர், தீ, ஆகாயம், காற்று என்னும் ஐந்து கட்டங்களைத்தாண்டி களிந்த விழியை அடைகிறான். கதியானம் மண்ஸ்தலமாகிய மூலதாரம், நீர் ஸ்தானமாகிய சுவாதிஸ்டானம், காற்று ஸ்தலமாகிய மணிபூரகம், ஆகாய ஸ்தலமகிய அனாகதம், காற்றுஸ்தலமாகிய விசுத்தி ஆகிய ஐந்து ஸ்தலங்களைக் கடந்து ஆச்ஞா சக்கரத்தில் வந்து நிற்கும்போது நெற்றிக்கண்ணை திறக்கின்றது. நெற்றிக்கண்ணில் வந்து நிற்கிறான் இந்திரநீலவிழியோடு கண்ணன்.
ஞானக்கண் பெரும்வரை உலகம் தட்டையாக தெரிகிறது. ஞானவிழி பெரும்போது உலகம் உருண்டையாக ஆகிறது. உருண்டையின் எந்த தொடக்கமும் அதன் மையமே. அந்த மையத்தில் நின்று உலகம் சுழல்கிறது.
ஞானி தான் அசையாமல் நின்று உலகம் சுழல்வதைப்பார்க்கிறான், அஞ்ஞானி தான் சுழன்று உலகம் அசையாமையைப்பார்க்கிறான்.
கண்ணன் எதிலும் அசையாமல் இருப்பதும், அவனை சூழ்ந்து இருப்பவர்கள் அனைவரும் அசைந்துக்கொண்டு இருப்பதும், உலகம் உருண்டையாக தெரிவதற்கும், தட்டையாக தெரிவதற்கும் உள்ள வித்தியாசம்தான்.
ஜெ மையத்தின் வழியாக உருவாக்கும் வட்டம் மாபெரும் நிஜயத்தின் சித்திரம்
நாகம்மாள்