:
மீண்டும் வெண்முரசு தன்னிடம் அனைவரும் சமமே என்றுணர்த்திய கதாபாத்திரம் ருக்மி. அவன் அரசியல் தேர்ந்தும், நட்புக்காகவும், தங்கைக்காகவும் எடுத்த முடிவு தான் சிசுபாலனோடு நச்சயிக்கப்பட்ட ருக்மணியின் திருமணம். நிலைமை அவனை மீறிச் செல்ல அவன் தன் வாக்கிலே நின்றாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான். அதனாலேயே தனிமைப்படுகிறான். இத்தனைக்கும் மேல் அவன் அமிதையோடு மரியாதையும், பாசமும் கொண்டுதானிருக்கிறான்.
இன்றைய அத்தியாயத்தில் அவன் அவமதிப்பும், சினமும் கொண்டவனாகக் காட்டப்படுகிறான். கிருஷ்ணன் அவளைக் கவர்ந்த பின், அப்போர் முடிந்தபின் அவன் நிலை என்ன? 'தொலைவில் கைவிடப்பட்ட புரவி ஒன்று தான் பட்ட புண்ணை நக்கியபடி எவருடன் என்றிலாது குரலெழுப்பி மன்றாடியது.', என்று வெண்முரசு சொல்கிறது. பாவம் தான் அவன், இல்லையா நண்பர்களே!!!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
மகராஜன் அருணாச்சலம்