Monday, August 3, 2015

குந்தியும் கர்ணனும்

அன்பு ஜெயமோகன்,

மழைப்பாடலின் கர்னன் பிறக்கும் பகுதியைப் படித்து நெகிழ்ந்தேன். என் வெகு நாள் கேள்விக்கான விடையைக் கண்டடைந்தேன். 

"ஒரு தாயால் எப்படித் தான் பெற்ற மகனை பெட்டியில் வைத்து நதியில் விட முடியும்? அது கொலையல்லவா !" என்றே நினைத்திருந்தேன்.

ஆனால், படகில் குந்தி தன் குழந்தையைத் தவிர்க்க இயலாமல் தொலைக்கும் இடம் உறுத்தலின்றி இயல்பாக இருந்தது.

பெறாத மகனுக்காக ராதையின் முலையூறும் பகுதியைப் படித்து கண்ணீருடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உங்கள் முன் உள்ள மிகப் பெரிய சவால் வெண்முரசு. அதை நீங்கள் மாபெரும் வெற்றியாக முடிக்க இறைவனை இந்த நள்ளிரவில் இறைஞ்சுகிறேன். 


என்றும் அன்புடன்,
மூர்த்தி ஜி
பெங்களூரு