கீதை என்பது ஒரு குறிப்பிட்டத் தருணத்தில் தோன்றியது என்பதைவிட, ஒரு
வாழ்நாள் அனுபவங்கள் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில் தொகுத்துச் சொல்லப்பட்ட
ஒன்று என்பது வெண் முரசில் இதற்கு முன்னரும் ஆங்காங்கு
கோடிகாட்டப்பட்டுள்ளது என்றாலும், இன்று வந்துள்ளது மிகச்சிறப்பாக
அமைந்திருக்கிறது.. பாரதத்திலும்,(பாகவதத்திலும்) ஒரு அண்ணலும்
நோக்கினாள் , அவளும் நோக்கினாள் தருணத்தை கொண்டுவந்துவிட்ட ஜெவின் அபார
கற்பனையாற்றலுக்கு சிறப்பு வந்தனங்கள். அதிமானுடன் குறித்த பார்வையும்
விவாதமும் ..என்ன சொல்ல....Simply Out of this World.
சுரேஷ் கோவை..