ஜெ,
இரண்டாம் முறை படிக்கும் பொழுதுதான் சக்கரங்களை கவனித்தேன்.
மித்திர
விந்தைக்கு நேர்ந்ததைப் போன்ற கண நேர தடுமாற்றம் தான் சாத்யகிக்கும்
நேர்வது, உலகியலுக்கும் ஆன்ம விடுதலைக்கும் நடுவேயான சக்கரம் அனாகதம் என
நினைக்கிறன். அந்த தடுமாற்றம் தாண்டியவனுக்கு விசுக்தி.
மேலும் இப்பொழுது கள்ளே வேறு பொருள் கொள்கிறது. இன்னும் எத்தனை முறை படித்தால் விளங்கிக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.
ஏ வி மணிகண்டன்