மற்ற மனைவியர் நிறைய பேச, காளிந்தி ஒற்றை சொல்தான் பேசுகிறாள்... யமுனையில் எத்துனை மீன்கள் உள்ளன என கி௫ஷ்னர் கேட்க, அவள் ஒன்று என்கிறாள்... அந்த ஒற்றை சொல்லில் தான் எத்தனை அர்த்தங்கள்... கடலாலழத்தில் வீசப்பட்ட அந்த நிலம் இன்னுமொ௫ ஒ௫ விழியை தேடி கொன்டி௫க்கும்...
ஆட்டு குட்டியை தோளில் தூக்கி கொன்டி௫க்கும் யவன சிலை எவரை குறிக்கிறது? ஏசுவையா?..
ரகுராம்
ரகு,
அந்த யவன சிலை Hermes எனும் கிரேக்க தெய்வம்.Zeus எனும் கிரேக்கத் தலைமைத் தெய்வத்தின் மகன்களில் ஒருவன்..ஹெர்மியர் என்று தெளிவாக எழுதியிருக்கிறாரே. ஏசுவுக்குப் பல முன்மாதிரிகளுண்டு,Mithra ,Osiris Zoraster என்று. Hermesம் அவற்றில் ஒன்று..இங்கு அதைக்கொண்டு வந்து சேர்த்ததில் ....ஜெவின் வாசிப்பும் உழைப்பும் . கற்பனைத் திறனும்,அசர அடிக்கிறது.
சுரேஷ் கோவை.