அன்புள்ள ஜெ.
வெண் முரசு தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு அத்தியாயம் படிக்கையில் எழும் சில கேள்விகளுக்குப் பின் தொடர்ந்து
வரும் அத்தியாயங்களில் விடைகள் கிடைத்துள்ளன. என்னுள் பல காலம்
கேள்வியாகவே இருந்த ஒன்று அதே (விடை தெரியாத)சுவாரசியமான கேள்வியாகஇந்திர நீலத்தில் பதிவாகி இருந்தது.அது அனைத்துக் கலைகளிலும் இளைய யாதவர்கொண்ட மேதமை.
அது போலவே,இளைய யாதவரை "ஒரு மானுட உடலில் எதுவோ ஒன்று தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்ததை மிகவும் ரசித்தேன்.
ரசித்த மற்றொரு இடம் மாத்ரியை முறைப்படி போட்டியில் வென்ற இளைய
யாதவருக்கு ஆதரவாக பார்த்தன்,கர்ணன்,அஸ்வத்தாமன் ஆகியோர் இணைந்து ஜராசந்தனை எதிர்த்துப் போரிட்டது.பொதுவாக தர்மத்தைப் பின்பற்றத்தான் பலர் விழைகின்றனர். தனக்கென, தான் வகுத்த தர்மத்திற்கும், பொதுவான பெரும் தர்மத்திற்கும் இடையே முரண்பாடு எழும்போது அணிகள் பிரிந்து எதிர் எதிராகநிற்கின்றன என நினைக்கிறேன்.
சில இடங்களில்,குறிப்பாக தொடர் வர்ணனைகளும்,பெரும் தத்துவ
விளக்கங்களும் வரும் சில இடங்களில் உங்கள் மொழிப்பிரவாகம்
கொஞ்சம் (எனக்கு) மூச்சு முட்ட வைக்கிறது.
நன்றி.
ரமேஷ் கிருஷ்ணன்