Sunday, August 9, 2015

மீண்டும் புராணம்:


வெண்முரசில் கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரமாகவெல்லாம் ஜெ காட்டுவதில்லை. எப்போதாவது ஏதோ ஒரு சூதர் அதைச் சொல்வார். மிக நேரடியாக இராமனின் மறு அவதாரம் தான் அவன் எனச் சொன்னது ஜாம்பவான் தான். அதுவும் அவர்களது முன்னோர் சொல் பொய்யாகாது என்று தனக்குத் தானே சொல்லிக கொள்வது போல் சொல்லுவார்.
ஆனால் இன்று ஜெ கிருஷ்ணன் வாயாலேயே அவன் இராமனும் தான் என்று சொல்ல வைத்துவிட்டார். "அவள் பெயரை அறிந்த கணமே ஏற்றுவிட்டேன்", என்று பார்த்தனுக்கு பதிலிறுக்கிறான் கிருஷ்ணன். ஆம், அவளின் பெயர் 'லக்ஷ்மணை' அல்லவா! இராமன் இங்கிருக்கும் போது லக்ஷ்மணன் மட்டும் எங்கோ இருக்கலாமா என்ன?
அருணாச்சலம் மகராஜன்