Monday, August 17, 2015

நகையாட்டு..!

கண்ணாடி மாதிரி கனவுகள் உடைந்து போவது எளிய மனிதர்களுக்கு மட்டுமே. பாமா எளியவள் அல்ல கனவுகள் கடந்த பேரரசி!

அவளை கனிய வைப்பதும் கைப்பிடிப்பதும் ஒருவனே! நீலன் அவன்.!
/நான் ஹரிணபதத்தில் கன்றுமேய்த்தாலும் துவாரகையின் அரசிதான். துவாரகை என்று ஒன்றை இளைய யாதவர் எண்ணும்போதே நான் அதன் அரசியாகிவிட்டேன். நான் அதன் அரசியென்பதை அவர் அறிந்ததே அதற்குப்பின்னர்தான்” என்றாள் பாமா. /

அத் தகைய உறுதி உள்ள அவளை வேறு யாரும் நெருங்குதல் இயலாது தானே.

/யாதவப்பெண் களஞ்சியப்பொன் அல்ல. அவள் காமதேனு. கனியாமல் அமுது கொள்ள எவராலும் இயலாது”

மிகையாய் பேசியும் மறுத்தும் மறைத்துப் பேசியும் நிகழ்வுகளை நீர்த்துப்போகச் செய்யவும்

எதிர்பார்த்த எதுவும் நடவாத போது அந்த ஏமாற்றத்தை எள்ளி நகையாடவும்  எளியவர்கள் எங்கேயும் உண்டுதான் போலும்!!

/ஏமாற்றம் வெறுமையை உருவாக்கி முற்றான நம்பிக்கையிழப்பை நோக்கி கொண்டு செல்ல “மகதத்தின் பொற்தேரில் சக்கரங்கள் இல்லை” என்ற கேலிச்சொல் பரவியது. அந்த வெறுமையை கேலியினூடாக கடக்கமுடியும் என்று கண்டதும் அதை பிடித்துக்கொண்டனர். அதுவரை இருந்த அனைத்து உணர்வெழுச்சிகளையும் வேடிக்கையாக மாற்றிக்கொண்டனர். “நூறு பசுக்களை இளைய யாதவர் பெண்செல்வமாக கேட்டிருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் இரண்டு அகிடுகள் இருக்கவேண்டுமாம்” என்றான் பாணன் ஒருவன். “இரண்டு அகிடுள்ள பசுக்கள் இங்கே நிறையவே உள்ளனவே” என்றான் அவன் நண்பன். பாணன் சொன்ன மறுமொழி கேட்டு மன்றிலிருந்தவர்கள் சிரித்தபடி அவனை அடிக்கப்பாய்ந்தனர்./

இன்றளவும் இருக்கிறது இந்த நகையாட்டு..!!

நிறைக இறையருள்! வாழ்த்துக்கள் ஜெ!!!

@தினேஷ்குமார்.

குழுமவிவாதம்