ஜெ,
"அளி"
என்ற சொல்லுக்கு இரக்கம், பரிவு அருள் என்ற பொருள்கள் உள்ளன என்று
கண்டேன். அளிக்கொடை என்றால் பிச்சை அல்லது நன்கொடை என்று பொருளா? கூகுளில்
தேடினால் அது வெண்முரசை மட்டுமே சுட்டுகிறது.
நன்றி
கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்
வெண்முரசில் உள்ள புதிய சொற்சேர்க்கைகளில் ஒன்று அது. நீங்கள்தான் விக்ஸ்னரியில் சேர்க்கவேண்டும்
அளி என்றால் கருணை
அளிக்கொடை என்றால் இரங்கி அளிக்கப்படும் கொடை
ஜெ