சமீபத்தில் அந்தியூர் குதிரைச் சந்தைக்கு சென்றிருந்தேன் , அங்கு ஒரு
வட்ட அரங்கு அமைத்து 'பென் ஹர்' பாணியில் குதிரைகளை ஓடவிட்டு
பயிற்றுனர்கள் அதன் மீது சவாரி செய்து சொதனையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கண் முன் "வெண் முரசு ". குதிரை சவாரியை /போட்டியை பார்ப்பது ஒரு அலாதியான
காட்சி. வெண் முரசு அதை இன்னும் மெருகேற்றுகிறது.
இன்றைய பதிவை படித்தவுடன் யவன குதிரைகளை தேடி சில படங்களை இணைத்துள்ளேன், உய்வுறுக.
கிருஷ்ணன்