சமீபத்தில் வெண்முரசு வாசிக்க அரம்பித்தென். உங்களுக்கு கோடானுகோடி நண்றிகள். தற்போது மழைப்பாடல் வாசித்து வருகிறேன்.
என்னுடைய கேள்வி - இது வியாஸர் இயற்றிய மஹாபாரதத்திலிருந்து வேறுபடிகிறதா? தங்களுடைய creative license எவ்வளவு?
இதுவரை படித்ததில் vyasar version லும் 1) காந்தாரியை மணம் செய்ய தூது வந்த கழுகு கொல்லப்பட்டதா 2) பாண்டு impotentஆ?
இவை
ஜெயமோகன் டாட் இன் -ல் வெண்முரசு விவாதங்கள் பகுதியில் cover
செய்யப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் அதற்கான linkஐ
அனுப்பவும். இல்லேயேல் ஒரு விரிவான reply அனுப்பவும். ஜெயமோகனிடமிருந்து
பதில் வந்தது என்று பீற்றிக்கொள்ள வசதியாக இருக்கும். :-)
Once again, thanks for writing Venmurasu and Aram. Simply amazing! Venmurasu has been on my to-read list since your first post.
Your fan,
Sriram
அன்புள்ள ஸ்ரீராம்
விரிவாக பதிலனுப்ப நேரமில்லை. இருந்தாலும் இது விளக்கம்
வெண்முரசு வியாசனை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. வியாசனின் கதையோட்டம், கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஆகியவை வெண்முரசிலும் இருக்கும். ஆனால் வியாசமகாபாரதம் தொன்மையான கவிதை. அதில் கதைநிகழ்வுகள் சுருக்கமாகவே சொல்லப்பட்டிருக்கும். உள ஓட்டங்கள் இருக்காது. குட்டிக்கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. வெண்முரசில் கதைநிகழ்வுகள் விரிவாக்கப்பட்டிருக்கும். கதாபாத்திரங்களின் மனம் இருக்கும். குட்டிக்குட்டிக் கதாபாத்திரங்கள் விரிவாக்கப்பட்டிருக்கும். வியாசரின் கதையில் உள்ள நுட்பமான மௌனங்கள், சொல்லப்படாத பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும். அந்தக்கழுகு போன்றவை என் கற்பனைகள். பாண்டு ஆண்மையற்றவன், வெண்நோய் கொண்டவன் என்பது அதிலேயே உள்ளது
வெண்முரசை வாசிப்பவர் எதுவுமே தெரியாமல் வெற்றுள்ளத்துடன் வாசிப்பவராக இருந்தால் அவருக்கு அதுவே அனைத்தையும் கற்பித்துவிடும். அதை வாசித்துச் சென்றாலே போதுமானது. அவருக்கு கொஞ்சம் மகாபாரதம் தெரியும் என்றால் அவர் இது மகாபாரதத்தின் மொழியாக்கமோ சுருக்கமோ அல்ல என்றும் காலந்தோறும் இந்தியப்பண்பாட்டில் மகாபாரதத்தை மறு ஆக்கம் செய்து முன்வைக்கப்பட்ட காவியங்கள் மற்றும் நவீனநாவல்களின் வரிசையில் ஒன்று என்று தெரிந்துகொள்ளவேண்டும். மகாபாரதத்தை மதநூலாக கொள்ளும் ஒரு சிறு தரப்பு உண்டு. புராணமாக மட்டுமே கொள்பவர்களே இந்துக்களில் பெரும்பாலானவர்கள். புராணங்கள் எல்லாமே மீண்டும் மீண்டும் மறுஆக்கம் செய்யப்பட்டவை. புராணங்களுக்கு உள்ளேயேகூட அந்த மறு ஆக்கம் உள்ளது
அந்த மறு ஆக்கம் எதற்கு என்றால் காலந்தோறும் உருவாகும் வாழ்க்கைச்சூழல்களை புரிந்துகொள்ளவும் காலம்கடந்த உண்மைகளை அதில் ஆராயவும்தான். வெண்முரசும் அதையே செய்கிறது. மூலத்துடன் அது கொண்டுள்ள உறவு அந்த பெருவெளியிலிருந்து கதைகளையும் படிமங்களையும் எடுத்துக்கொள்வதற்காக மட்டுமே.
http://venmurasudiscussions.blogspot.in/ என்னும் தளத்தில் பழைய கடிதங்களை வாசிக்கலாம். ஜெயமோகன்.இன் தளத்தில் வெண்முரசின் பழைய கட்டுரைகளையும் வாசிக்கலாம். பொதுவாக வாசித்துச்சென்றாலே கொஞ்சம் முன்னகரும்போது தெளிவு வந்துவிடும்
ஜெ
வாசிப்புக்காக
இந்தியப்பண்பாட்டை திருப்பி எழுதுகிறேன்
\தென்னகச்சித்திரங்கள்
வண்ணக்கடல் கனவும் படங்களும்
வரலாறும் செவ்வியலும் மழைப்பாடல்
மரபும்மறு ஆக்கமும்
நீலமும் இந்திய மெய்யியலும்
மழைப்பாடல் மாறுதலின் கதை
நீலம் யாருக்காக?
மழைப்பாடல் பற்றி கேசவமணி
சமணமும் மகாபாரதமும்
வெண்முரசு வாசகர்களின் விடை
வெண்முரசு விமர்சகர்கலின் தேவை
பிரயாகை கேசவமணி
பிரயாகை ஒருமை
மகாபாரதம் கேள்விகள் கேசவமணி
நீலம் மலர்கள்
கண்ணன் சில ஐயங்கள்
ஆசுரம்
அசுரர்
பிராய்கை ஒருமை
அழியா இளமை
\தென்னகச்சித்திரங்கள்
வண்ணக்கடல் கனவும் படங்களும்
வரலாறும் செவ்வியலும் மழைப்பாடல்
மரபும்மறு ஆக்கமும்
நீலமும் இந்திய மெய்யியலும்
மழைப்பாடல் மாறுதலின் கதை
நீலம் யாருக்காக?
மழைப்பாடல் பற்றி கேசவமணி
சமணமும் மகாபாரதமும்
வெண்முரசு வாசகர்களின் விடை
வெண்முரசு விமர்சகர்கலின் தேவை
பிரயாகை கேசவமணி
பிரயாகை ஒருமை
மகாபாரதம் கேள்விகள் கேசவமணி
நீலம் மலர்கள்
கண்ணன் சில ஐயங்கள்
ஆசுரம்
அசுரர்
பிராய்கை ஒருமை
அழியா இளமை