Monday, January 9, 2017

இரண்டு உவமைகள்





அன்புள்ள ஜெ

அர்ஜுனன் தவம் செய்யும் காட்சியில் வரும் இரண்டு உவமைகள் தனிக்கவிதை போல் இருந்தன. உண்டு உண்டு உலகத்தையே தன் பின்பக்கம் குவித்துவிட்ட மண்புழு. அந்த உலகில் இருந்து அது எடுத்துக்கொண்டதெல்லாம் உண்ணும் ஆற்றலுக்கே சரியாகப்போய்விடுகிறது. உண்டு தீர்த்து அது தன்னை உண்கிறது. ஜெ, நான் ஒன்பது மாதம் ஹைப்பர் டிப்ரஷனில் இருந்தேன். அந்த காலகட்டத்தின் மொத்த தவிப்பையும் அந்த ஒற்றை உவமை சொல்லிவிட்டது

அடுத்த உவமையும் அதேபோலத்தான். தோழியின் பிம்பத்தைப்பார்த்த மான் அவளை உண்டுவிட முயல்கிறது. ஆனால் குடிக்கக்குடிக்க சுனை ஊறிக்கொண்டே இருக்கிறது. காதலை குடித்து முடிக்கமுடியுமா என்ன? இது அந்த முதல் உவமையின் மறுபக்க. ஆனால் இனிமையானது

மகேஷ்