ஜெ,
கிராதம் நாவலில்
வந்துகொண்டே இருக்கும் பிட்சாடனர்களும் சண்டன் போன்ற உக்கிரமான சைவச்சூதர்களும் ஆச்சரியமளிக்கிறார்கள்.
இவர்கள் இந்தியாவில் பல ஆயிரம் வருடங்களாக இருந்துகொண்டே இருக்கிறார்கள். வெள்ளைக்கார
ஆட்சிக்காலத்தில் இதைப்பதிவுசெய்திருக்கிறார்கள். அன்றைக்குப் பஞ்சத்திலே பல ஆயிரம்பேர்
உயிரிழந்தார்கள். ஆனால் இவர்களை அன்றைய சமூகம் எப்படியோ பேணியிருக்கிறது. இவர்கள் ஒரு
இந்தியாவின் அடையாளமாகவே இருந்திருக்கிறார்கள்.
இவர்களை நாம் இன்றுள்ள பக்திமார்க்க மதத்தை வைத்துப்புரிந்துகொள்ள
முடியாது. ஒழுக்கம் அறம் கருணை அன்பு என்று நாம் சொல்லும் எதுவுமே இவர்களுக்கு ஒரு
பொருட்டல்ல. இவர்கள் தீபோல எரிந்து எரிந்து உண்மையை அறியமுயல்பவர்கள். சன்முகவேல் பல
ஓவியங்களில் இவர்களை தீயாகவே காட்டியிருந்தார் அற்புதமாக இருந்தது அது
முருகேஷ்