அன்புள்ள ஜெ
வெண்முரசின் இன்றைய
அத்தியாயத்தில் பெண்களின் தைரியம் பற்றி வரும் இடம் ஆழமானது. இதை நானே பார்த்திருக்கிறேன்.
காதல் போன்ற விஷயங்களில் பெண்களுக்கிருக்கும் தன்னம்பிக்கை அபாரமானது. நினைக்கவே முடியாத
அளவு தைரியமானவர்கள். அது ஏன் என்று இன்று வாசித்தேன். அவர்கள் வெட்டிக்கொண்டு செல்லமுடிகிறவர்கள்.
அவர்களுக்கு நேற்று இல்லை. ஆகவே எதையும் இழப்பதில்லை. பிரில்லியண்ட்
ஜெயராமன்