அன்புள்ள ஜெ
அர்ஜுனனுக்கு சிகிச்சை அளிக்கும் அந்தப்பூசகரின் சித்திரம் மனதிலே பதிந்துவிட்டது. எங்கே பார்த்தேன் என்றே தெரியாதபடி. சீன முகம். சரிதானே? இப்படி எத்தனை முகங்கள். சரித்திரம் முழுக்க நிறைந்திருக்கும் இந்த பெயரில்லா மனிதர்களச் சொல்லிக்குவிக்கிறது வெண்முரசு. நாவல்முடியும்போது ஆயிரம் கதாபாத்திரங்களாவது வந்திருக்கும் என நினைக்கிறேன்
இதேபோல பல இடங்களில் பலர் அர்ஜுனனை மீட்டு எடுத்திருக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் அவன் உயிர் எத்தனைபேருக்குக் கடன்பட்டது என நினைத்தபோது ஆச்சரியமாக இருந்தது
செல்வா