ஜெ
கீழ்க்காணும் வரியை ஆச்சரியத்துடன் வாசித்தேன். அற்புதமான ஓர் உண்மை இதில் உள்ளது. மாபெரும் யோகிகள் தங்கள் யோகபலத்தால் எதையும் செய்வார்கள். ஆனால் அதை தங்களுக்கோ தங்களைச் சார்ந்தவர்களுக்கோ உலக இன்பதுன்பங்களில் பயன்படுத்தமாட்டார்கள். பயன்படுத்தவும் கூடாது. ரமணமகரிசிக்கு ஏன் கான்சர் வந்தது என்று நான் கேட்டபோது என் அப்பா எனக்குச் சொன்னது இது
நீ காணும் கொலைப்போர்க்களங்களில் உன்னைவிட ஆற்றலுள்ளோர் உனக்கு எதிர்வருவர். உன் உற்றார் அவர்களின் படைக்கலம் முன் நிற்பர். உன் அரசும் குடியும் புகழும் உன் வில் ஒன்றையே சார்ந்திருக்கும். ஆனால் அனைத்தையும் வெல்லும் பெரும்படைக்கலத்தை நீ எடுக்க முடியாது
உண்மையிலேயே பாசுபதத்தை அர்ஜுனன் மகாபாரதப்போரில் அவ்வளவு இக்கட்டுகளிலும் பயன்படுத்தவில்லை. அபிமன்யூவை ஜெயத்ரதன் கொன்றபோதும்கூட பயன்படுத்தவில்லை. மிக ஆச்சரியமான விஷயம் இது
ஜெயராமன்