ஜெ
அர்ஜுனன் மீண்டும்
அர்ஜுனனாக எழும் காட்சி அற்புதமானது. அவன் நகரங்களுக்குள்ளும் அரசுகளுக்குள்ளும் நுழைவதில்லை
என்னும் நெறிகொண்டவன். ஆனால் காடுகளிலும் பாலைநிலங்களிலும் வென்று சென்றுகொண்டே இருக்கிறான்.
அவனுடைய ஒவ்வொரு வெற்றியும் ஒரு ஞானமாகவே ஆகிறது. இப்போது கின்னரர்களிடமிருந்து அவன்
எதைப்பெற்றுக்கொள்ளப்போகிறான் என்பதை ஆவலுடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அவன் மலைமகள்[ பார்வதி என்றால் பர்வதத்தில் பிறந்தவள்] பார்வதியை
வெல்லும் இடம் ஏனோ எனக்கு பூர்சிரவஸின் கதையை ஞாபகப்படுத்தியது
ராஜாராம்