Friday, January 13, 2017

கிராதம் முழுமை:



வெண்முரசின் வரிசையில் கிராதம் பல வகைகளிலும் தனித்துவமானது. பிற நாவல்கள் ஒரு வகை சாந்தத்தோடு துவங்கி ஒரு உச்சத்தில் முடிவடையும். நாவல் முடிகையில் ஒரு வித வெறுமை வந்து சேரும். அவற்றிற்கு முற்றிலும் மாறாக மிக மிக உக்கிரமாகத் துவங்கி மிக மென்மையாக, இனிமையாக முடிகிறது கிராதம். 

இந்நாவலில் அர்ஜுனன் திசைத் தேவர்களிடம் ஞானம் பெறும் தருணங்கள் எல்லாம் வலி மிகுந்தவை, மிக மிகக் கடினமானவை. திரும்பி வர சாத்தியங்கள் என்பதே குறைந்தவை. அத்தனை சிரமங்களுக்குப் பிறகு அவன் கண்டடையும் பாசுபதம் அவன் முன் கிட்டத்தட்ட தாம்பாளத்தில் வைத்து நீட்டப்படுகிறது. 

அதை அடைந்து, ஆகித் திரும்புகையில் அவன் கொண்ட நிறைவு வாசகர்களுக்கும் வந்து சேர்கிறது. ஆம், நாவலின் இறுதியில் வெறுமையை உணரவில்லை. இனிய சோர்வும், மகிழ்வும் ஓர் நிறைவுமே எஞ்சின. இது முற்றிலும் புது அனுபவம். மீண்டுமோர் உச்சத்தைப் படைத்திருக்கிறீர்கள், ஒரு சவாலை உங்களுக்கே அளித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்களும், நன்றிகளும் ஜெ.

அருணச்சலம் மகராஜன்