Monday, January 16, 2017

தென்மொழி




ஜெ

தென்மொழியே தன் மொழி என்றும் அது எப்படி உருவாகியது என்றும் தென்மொழித்தெய்வமே சொல்லும் இடம் புராணம் எப்படி கற்பனை வழியாக மெய்யை தொட்டுவிடமுடியும் என்பதற்கான உதாரணம்

கால் எனில் காற்று. அலையலையென எழுந்துவரும் முடிவிலா காற்றென்றே காலம்


அன்ன எனில் போல என்று பொருள். அன்னதே அன்னமென்றாகியது


 பொருளை பிறிதொன்றுடன் ஒப்பிடாமல் அறியமுடியாது. ஒப்பிடப்பட்ட முதற்பொருளின் முன்பாக அனைத்துடனும் ஒப்பிடப்படும் முழுப்பொருள் நின்றிருந்தது

து அன்னத்தைப் பொருளென்றாக்குகிறது. சொல்லில் பொருளென குடிகொள்கிறது

 குடி என்றால் வாழ்வது. கூடுதல் என்றால் இணைவது, மிகுவது. கூடுவதே குடி. குடியை கூடு என்றும் நாங்கள் சொல்வதுண்டு. 

வழிதலென்பது வழியென்றானது. வழியே வாழ்வென்றானது. வாழ்வே வழுத்துதல் என்க! வழுவும் அதுவே

என்றெல்லாம் சொல் எப்படி மொழியாகியது என்று சிவனே சொல்லிச்செல்லும் இடம் அழகியது என்றால் வாழை என்பது வாழ்விலிருந்து வந்த சொல் என தாவிச்செல்லும் இடம் கவிதை. அதை நீங்கள் வேறுவகையில் ரப்பர் நாவலிலும் சொல்லியிருந்ததாக நினைவு


எஸ். மாணிக்கம்