அன்புள்ள
ஜெ
அர்ஜுனனின்
தவம் முதிர்ச்சியடைந்து அவன் சிவசக்தி லீலையை தன் சுற்றும் பார்க்கிறான். அந்த உவமைகள்
அழகானவை. ஒவ்வொன்றுக்கும் அளிக்கப்பட்ட பெயர்களை சென்று நெட்டில் தேடிப்பார்த்தேன்.
ஸ்ரவ்ய –கேட்டல்
வீக்ஷ்ண –
பார்வை
தம்ஸம் –கடிப்பது
புண்படுத்துவது
ரம்யம் –
மகிழ்வது இணைவது
தன்யம் -நிறைவு
இந்த ஐந்தையும்
அறிந்தபின் ஒட்டுமித்தக் காட்சியே மாறிவிட்டது. ஆண்குயில் கூவுகிறது. சிவம் தான் நடனமிடுகிறது.
அன்னையின் அமைதிதான் அதற்கு பதில். அன்னையை எவ்வளவு குடித்தாலும் குடித்துத் தீர்க்கமுடியவில்லை.
ஆகவே அன்னையை புண்படுத்துகிறது அப்பனின் மதம். பிறகு அவர்கள் முற்றிலும் இணையாக ஆகி
புணர்கிறார்கள். இறுதியில் அன்னையைச் சுற்றி ஆயிரம் முகங்கள் கொண்டு எழுந்து தேனை நிரப்புகிறார் சிவன். அவள் மகன்கள்தான் அவர்கள்
அனைவரும்
நீங்கள் சைவம்
எழுதினாலும் அது கடைசியில் சாக்தமாகவே முடியும் என் நினைக்கிறேன்
சாரங்கன்