Sunday, January 15, 2017

பாசுபதமும் கிருஷ்ணனும்



ஜெ

வெண்முரசு நாவல்களை மீண்டும் தொகுத்து வாசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே நான் இந்த இடைவெளிகளைப்பார்ப்பது வழக்கம். இப்போது பார்க்கும்போது வனவாசம் என்ர இடத்தை நீங்கள் சூட்சுமமாக பயன்படுத்திக்கொண்டு போருக்கான தத்துவார்த்தமான காரணங்களை அலசியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

சொல்வளர்காடு வேதங்கள் வாசிக்கப்படும் விதத்தை ஆராய்ந்தது. அதில் உள்ள ஸ்கூல்களை சொல்லியது. அதன் மையம் என்பது சாந்தீபனி ஸ்கூல். அவர்கள் வேதாந்த்த்தை முன்னெடுக்கிறார்கள். அதன் முதல்மாணவர் கிருஷ்ணன்

கிருஷ்ணன் வேதாந்த்ததை முன்வைத்து நால்வேதங்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கிறான். அவன் ஒரு சூத்திரர்தலைவனாக எழுந்ந்து வருவதனால் சத்ரியர்கள் அவனை எதிர்க்கிறார்கள். அதற்காகத்தான் போர் வரப்போகிறது 

அதன்பின்னர் மேலும் பின்னால் போகிறீர்கள். வேதத்தின் உறைவிடங்களைத் தேடுவது கிராதம். அது அதர்வண வேதமும் இணைந்த வஜ்ரமார்க்கம் இந்திரன் ஓங்கி நின்ர மாகேந்திரன் அதுக்குமுன் இருந்த வாருனம் என்று சென்று ஆதியாக இருந்த பாசுபதம் வரைச்செல்கிறது

ஆசுரவேதம் அறிந்த ஞானியாகிய விருத்திரன் இந்திரனால் கொல்லப்பட்டான். மாகேந்திரமும் வஜ்ரமும் வந்தது. இந்திரனை கடந்து  மகாநாராயண வேதத்தை உருவாக்குபவன் பிரகலாதன் . ஆனால் இங்கே அசுரனாகிய விருத்திரனின் நீட்சியாக கிருஷ்ணன் வந்து நின்றிருக்கிறான்

பலகோணங்களில் சிந்திக்கவைத்தது.வேதாந்தம் அசுரர்களுக்கும் உரிய ஒரு வேதசாரத்தை அடையமுயால்கிறாது என்ற எண்ணம் வந்தது

கிருஷ்ணனைப்புரிந்துகொள்வது எளிதல்ல

சரவணன்